”பொம்மைகளோடு கதையாடல் ” 10.08.2025 ஞாயிறு காலை 11.00 மணி
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று கொண்டு வருகின்றது. அதன்படி (10.08.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமிகு.ப.சக்திவேல் அவர்கள் வழங்கும் ”பொம்மைகளோடு கதையாடல்”எனும் குழந்தைகளுக்கான தனித்துவமான மற்றும் பயனுள்ள நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கைபேசி பயன்பாடுகளைத் தவிர்த்து, புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தின் அவசியத்தை உணர்த்தும் விதமாக பொம்மைகள் மூலம் கதையாடல் நிகழ்வானது மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ... நன்றி ...