முத்தமிழ் முற்றம் 11.07.2025 வெள்ளிக்கிழமை 5.00 மணிக்கு
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 11.07.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "ஏணி-தோணி-கேணி – தமிழர் வாழ்வில் சங்க இலக்கியம்" என்ற தலைப்பில் முனைவர்.சண்முக திருக்குமரன் (நல்லாசிரியர்) அவர்கள் சங்க இலக்கியம் கூறும் வாழ்வியலின் அறத்தை தனக்கே உரிய பாணியில் சிறப்புரையாற்றினார். வாசகர்கள் திரளாக கலந்துகொண்டு தமிழ் அமுதம் பருகி மகிழ்ச்சியடைந்தனர். கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.
