" நிலவொளி " சங்க கால இலக்கியங்கள் பற்றிய உரை | 12/04/2025 சனிக்கிழமை, மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது.
Posted by Kalaignar Centenary Library, Madurai on April 07, 2025
அனைவருக்கும் வணக்கம் ! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தோறும் நடைபெறும் நிலவொளியில் என்ற நிகழ்ச்சியில் இன்று (12/04/25) வாசகர்கள் கலந்து கொண்டு சங்க இலக்கியம், கலிங்கத்துப்பரணி, சிவகாமி சபதம், கவிதை, கட்டுரை, புதுமைப்பித்தன் மற்றும் இக்கிகய் கதைகள், தாங்கள் படித்து ரசித்த புத்தகத்தின் கருத்துக்கள், புத்தக விமர்சனம், என பல்வேறு தலைப்புகளில் உரையாடினர் இதில் கலந்துகொண்ட வாசக பெருமக்களுக்கும் நிகழ்ச்சி முடிவு வரை மழை வராமல் காத்துக் கொடுத்த அந்த இயற்கைக்கும் நன்றி கூறுகின்றோம்..
Categories: Events