குழந்தைகள் நிகழ்ச்சி -"சிறுவர்களுக்கான "Comic Making Workshop" திரு. J.நந்தகுமார் , (lead illustrator). - அவர்களின் - 16.03.2025 - ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு
Posted by Kalaignar Centenary Library, Madurai on March 11, 2025
வணக்கம் !
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (16.03.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு. R .நந்தகுமார் ,(lead illustrator). அவர்களின் "Comic Making Workshop" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், திரு. R .நந்தகுமார்அவர்கள், ஒரு கதையின் நிகழ்வுகள் (Start ,problem ,solution ,End ) வரிசைப்படுத்தப்பட்ட முறையில் வரையப்பட்டு, அக்கதையின் கதைப்பாத்திரங்களுக்கிடையான உரையாடல்களை எவ்வாறு பெட்டிகளில் அல்லது ஊதுபைகளில் உருவாக்குவது குறித்து எளிய செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் . இந்த நிகழ்வு குழந்தைகள் தாங்கள் அறிந்த கதைகளின் கதாபாத்திரங்களை கொண்டு சித்திரக்கதைகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றி அறியும் வாய்ப்பாக அமைந்தது . இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...
Categories: Events