சிறுவர்களுக்கான கதை எழுதும் பயிற்சி- பேராசிரியர். கார்த்திகா கவின் குமார் (எழுத்தாளர், கதைசொல்லி) | 09.02.2025 காலை 11.00 மணி
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் காலை 11.00 மணிக்கு பேராசிரியர் கார்த்திகா கவின் குமார்(எழுத்தாளர், கதைசொல்லி),அவர்களின் வாருங்கள்....கதை எழுதுவோம்...(சிறுவர்களுக்கான கதை எழுதும் பயிற்சி) என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்வில், திருமதி.கார்த்திகா கவின் குமார் அவர்கள், சிறுவர்களுக்கான கதை எழுதும் முறை, அவற்றின் வகைமைகள், கதைகளுக்கான களங்கள், கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் போன்றவை குறித்து தெளிவாக விளக்கினார்.மேலும் கதைகள் சொல்லும் முறையினையும், கதைகளில் குரல் மாற்றம் குறித்தும் கூறினார்.
இந்நிகழ்வில் இஸ்ரோவின் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...




.jpg)