சிறுவர்களுக்கான "குழந்தைகளுக்கான வில்லுப்பாட்டு" - திருமதி.ரா.ஞானசுந்தரி , திருமதி. தி.சண்முகப்ரியா மற்றும் குழுவினரின் | 02.03.2025 காலை 11.00 மணி
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் காலை 11.00 மணிக்கு ஆசிரியர்கள் திருமதி.ரா.ஞானசுந்தரி , திருமதி. தி.சண்முகப்ரியா மற்றும் குழுவினரின் , 'குழந்தைகளுக்கான வில்லுப்பாட்டு' என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில், ஆசிரியர்கள் மற்றும் குழுவினர் பாரம்பரிய வீர விளையாட்டுக்கள் மற்றும் கலைகளை குழந்தைகள் அறியும் வண்ணம் வில்லுப்பாட்டுடன் பாடி , விளக்கம் அளித்தனர் . மேலும் குழந்தைகளைக் குழுக்களாகப் பிரித்து , ஒவ்வொரு குழுவிற்கும் தமிழ் எழுத்துக்களை கொடுத்து , அந்த முதல் எழுத்தில் தொடங்கும் சொற்களை உருவாக்கும் புதிர் போட்டியும் நடத்தப்பட்டது. 'காய்கறிகள் வீட்டுக் கல்யாணம்' கதைப்பாடலும் கற்பிக்கப்பட்டது.இந்த நிகழ்வு பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான வில்லுப்பாட்டு பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்தது .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் .. நன்றி