குழந்தைகள் நிகழ்ச்சி -"கதையாகும் கலை"- முதுமுனைவர் சு.இராமர் -06.10.2024 - ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (06.10.24), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு முதுமுனைவர் சு.இராமர் அவர்களின் "கதையாகும் கலை" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் முதுமுனைவர் சு.இராமர் அவர்கள் குழந்தைகளுக்கு பல்வேறு வாழ்வியல் மற்றும் அறநெறிக் கதைகளை குழந்தைகள் விரும்பி கேட்கும் வண்ணம் சொல்லி ,இறுதியில் ஒரு தன்னம்பிக்கை கதையை குழந்தைகளிடம் கொடுத்து அதை வாசித்து முடித்தவுடன் கதைகளில் முடிவில் உள்ள வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஏற்படுத்தினார் . இந்த நிகழ்வு குழந்தைகளின் கவனிக்கும் திறன் , கற்பனை திறன் மற்றும் நல்ல பண்புகளை பெரும் தருணமாக அமைந்தது .குழந்தைகளும் அதிக ஆர்வத்தோடு பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.