" குழந்தைகளுக்கான கணிதம் இனி இனிக்கட்டும் " - முனைவர் V. மீனா அவர்களின் - 04.08.2024, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (04.08.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு முனைவர் V. மீனா அவர்களின் " கணிதம் இனி இனிக்கட்டும்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் முனைவர் V. மீனா அவர்கள், அடிப்படை கணிதம்,கணிதத்தில் முக்கிய அறிஞர்களின் பங்கு, அன்றாடவாழ்வில் கணிதத்தின் பயன்பாடு,கணித புதிர்கள் அவற்றை எவ்வாறு தீர்வு காண்பது, போன்ற மூளைக்கு பயிற்சி தரக்கூடிய எளிய கணித முறைகளை செயல் விளக்கங்களோடு கற்றுக்கொடுத்தார். இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு கணிதத்தில் சிந்திக்கும் ஆற்றலையும்,கணிதத்தில் எளியமுறையில் தீர்வு காணும் வழிமுறைகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்தது .இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.