" குழந்தைகளுக்கான நகர்ப்புற விவசாயப் பட்டறை " - திருமதி .அர்ச்சனா தெய்வா-14.07.2024, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (14.07.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமதி .அர்ச்சனா தெய்வா அவர்களின் " குழந்தைகளுக்கான நகர்ப்புற விவசாயப் பட்டறை " என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் திருமதி அர்ச்சனா தெய்வா அவர்கள், இன்றைய சூழலில் மாடிதோட்டத்தின் அவசியம், பயன்பாடு, வீட்டிலேயே தோட்டம் அமைக்கும் முறை, மற்றும் தோட்டத்திற்கு தேவைவையான நேர்த்தியான விதைகள் மற்றும் தொட்டிகள் அல்லது கொள்கலன்களை தேர்வு செய்வது, விதைகளை எவ்வாறு விதைப்பது, பராமரிப்பது போன்றவற்றை எளிமையான செயல் விளக்கங்களுடன் எடுத்துரைதார்,இறுதியாக குழந்தைகளின் சந்தேகங்களுக்கு சிறந்த விளக்கம் கொடுத்தார். இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு வீட்டில் பயிர் செய்யும் ஆர்வத்தையும் உத்வேககத்தையும் ஏற்படுத்தியது.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.