"முத்தமிழ் முற்றம் " ( நமக்குள் புதுமை புகுத்திய புதுக்கவிஞர்களின் மீள்பார்வை கருத்தரங்கம் ) - முனைவர் திருமதி. புனிதா பாண்டியராஜ் | 13.07.2024 , மாலை 5.00 மணியளவில்
முத்தமிழ் முற்றத்தில் “சிறப்பு நிகழ்ச்சியாக” 13.07.2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் ”நமக்குள் புதுமை புகுத்திய புதுக்கவிஞர்களின் மீள்பார்வை கருத்தரங்கம்” என்ற தலைப்பில் முனைவர் திருமதி. புனிதா பாண்டியராஜ் அவர்களுடன் நமது வாசகர் திருமதி சுபா (எழுத்தாளர்), ஆசிரியர் ராஜா, ஆசிரியர் செல்வலட்சுமி மற்றும் ஆசிரியர் ராஜி சுரேஷ் ஆகியோர்கள் பங்குபெற்று புதுமைப்பித்தன், மு. மேத்தா, ந. பிச்சமூர்த்தி மற்றும் வைரமுத்து ஆகிய தமிழ் கவிஞர்களின் படைப்புகள், கருத்துக்கள் மற்றும் எழுத்து நடைகளின் சிறப்புகளைப் பற்றி இந்த கருத்தரங்கில் பறிமாறிக் கொண்டனர்.




