கோடைக் கொண்டாட்டம் 2024 ” (MIME நிகழ்வும் பயிற்சியும் - பகுதி 2) - திரு. MIME உமேஷ் |24.05.2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று (24.05.2024 ) நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் இருபத்திநான்காம் நாள் நிகழ்ச்சியாக திரு. MIME உமேஷ் அவர்களின் "Mime நிகழ்வும் பயிற்சியும் - பகுதி 2 " நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திரு. MIME உமேஷ் அவர்கள் நெகிழி பற்றிய விழிப்புணர்வை பாவனை நாடகம் மூலம் வழங்கினார் மேலும் குழந்தைகளுக்கு பாவனை நாடகத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் செயல் விளக்கங்களுடன் பயிற்றுவித்தார் ,குழந்தைகளும் மிகவும் ஆர்வத்தோடு முகத்தில் சாயம் பூசி பாவனை நாடகத்தில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


