" கோடை கொண்டாட்டம் 2024 " (குறும்பட பயிற்சி) - திரு.S ஆண்டனி | 02.05.2024 முதல் 05.05.2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on April 27, 2024

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் நடைபெறவிருக்கும்  ”கோடை கொண்டாட்டம் 2024”  நிகழ்வின் ஒருபகுதியாக 02.05.2024 முதல் 05.05.2024 முடிய திரு.S ஆண்டனி    அவர்களின் "குறும்பட பயிற்சி"   நடைபெறவுள்ளது. இப்பயிற்சிப் பட்டறையில் ஒரு குறும்படம் எடுப்பதற்கான முழுமையான பயிற்சி அளிக்கப்படும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர் ஆகவே முன்பதிவு அவசியம்.  இதில் பங்கு பெறும் சிறுவர்களுக்கு பயிற்சியின் இறுதியில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அவர்கள் தயாரித்த குறும்படம் 31.05.2024 அன்று நூலகத்தில் திரையிடப்படும். விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அனுமதி இலவசம்!  நன்றி ...

குறிப்பு :-  வயது (age ) 11 முதல் 18 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள்.

முன்பதிவிற்கு :https://tinyurl.com/KCLKIDSFLIM




Categories: