Popular science lecture on " மரபியல் மகத்துவம் ” (03.04.2026) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு

Posted by Elakkiya on April 04, 2026

 அனைவருக்கும் வணக்கம்!,

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (03/04/2026) மாலை 5.00 மணியளவில் நடத்திய 33வது   Popular science lecture on மரபியல் மகத்துவம் ” என்னும் தலைப்பில் முனைவர்.P.சுந்தரேசன் (மூத்த விஞ்ஞானி), மூலக்கூறு மரபியல் துறை ,அரவிந்த் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை, மதுரை.,அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் முனைவர்.P.சுந்தரேசன் அவர்கள் தமது உரையில்  மரபியல் என்றால் என்ன, உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் அடிப்படை வேறுபாடுகள், உயிரியல் வாழ்க்கைச் சுழற்சியின் முக்கிய நிலைகள் மைட்டோசிஸ் மற்றும் மியோசிஸ் போன்ற அணுக்கிளை பிரிவுகள் எவ்வாறு உயிரினங்களின் வளர்ச்சிக்கும் இனப்பெருக்கத்திற்கும் அவசியமானவை என்பதையும், பாரம்பரியம் (Heredity) மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் மனிதர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன என்பதையும், மைட்டோகாண்டிரிய மரபியல், முழு ஜீனோமின் வரிசைப்படுத்தல் போன்ற நவீன அறிவியல் முன்னேற்றங்கள்  குறித்தும் எளிய விளக்கக்காட்சி வாயிலாக எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்வில் பங்குபெற்றவர்களின் கேள்விகளுக்கு சிறந்தமுறையில் விளக்கம் அளித்தார் . இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி ...

இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/1J5QH1NbE7/

இந்நிகழ்வின் பவர்பாயிண்ட் விளக்கக்காட்சி:https://docs.google.com/presentation/d/1wb_eV-sNvUr2_0slYDyT-sn5oG2Nj98b/edit?usp=drivesdk&ouid=115156825109136968399&rtpof=true&sd=true