"சுதா மூர்த்தி கதைகள் : ஒரு தொகுப்பு" (12.04.2026) ஞாயிறு அன்று காலை 11.00 மணி

Posted by Elakkiya on April 05, 2026

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும்,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று கொண்டு வருகின்றது. 

அதன்படி (12.04.2026) ஞாயிறு அன்று காலை 11.00  திருமிகு உமையாள் சுப்பிரமணியம் மற்றும் திருமிகு பத்மப்ரியா சுரேஸ் ஆகியோர் எழுத்தாளர் திருமதி சுதா மூர்த்தி அவர்களின் கதைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எடுத்துரைக்க உள்ளனர்.  எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  நன்றி...,அனைவரும் வருக! அனுமதி இலவசம்!.

இந்நிகழ்விற்க்கான முன்பதிவிற்கு : https://tinyurl.com/kclkids