புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கு நூல்கள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு

பொது நூலக இயக்ககம்

பத்திரிக்கைச் செய்தி

கோயம்புத்தூரில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் அமையவுள்ள காமராசர் அறிவுலகம் ஆகிய இரண்டு சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணிணி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உட்பட அனைத்து பாடங்களிலும் புகழ் பெற்ற நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இந்நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகிறது இந்நூல் கொள்முதலில் பங்கேற்க, www.annacentenarylibrary.org இணையதளத்தில் "புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்" என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் (Google Form) நூல் விவரங்களை 26.12.2025 பிற்பகல் 5.00 மணிக்குள் (Unicode Font) பதிவேற்றம் செய்ய வேண்டும், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி படியினை (Sample Copy) 05.01.2026 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.annacentenarylibrary.org என்ற இணையதளத்திலும்

தொலைபேசி எண்: 044 - 2220 1177

தொடர்பு கொள்ளலாம்.

"Abacus@KCL" (10.01.2026) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

Posted by Mohanraj Sekar on January 05, 2026

 அனைவரும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளுக்கு எண்கணித கணக்கீடுகளை எளிதாக்கும் முயற்சியாகவும், கணிதத்தின் மீதான பயத்தைப் போக்கி, ஆர்வத்தை உண்டாக்கிடவும் , எண் நினைவாற்றலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்பு நடைபெற்றுவருகின்றது . அந்த வகையில் (10.01.2026) சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் 14வது "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அனுமதி முற்றிலும் இலவசம்! நன்றி ... 

குறிப்பு :- 

1. வயது (age) 6 முதல் 14 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள்.

2. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் 

3.இந்நிகழ்விற்கு வரும்பொழுது குறிப்பேடு ,பென்சில் ,அழிப்பான் மற்றும் "எண்சட்டக் கருவி"(Abacus Kit ) வைத்திருப்பவர்கள் கொண்டுவரவும். 

இந்த வார நிகழ்வு முன்பதிவிற்கு : https://tinyurl.com/Abacus-at-KCL