“நூல் அரும்புகள்” & "Creative Crafts " 30.11.2025 ஞாயிறு காலை 10.30 மணி முதல் 01.00 மணி வரை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது"

Posted by Mohanraj Sekar on November 30, 2025

 

அனைவருக்கும் வணக்கம் ,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி  (30.11.2025) அன்று ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் மற்றொரு பயனுள்ள நிகழ்வாக காலை 11.00 திருமிகு A.செய்யது இப்ராஹிம், அவர்கள் வழங்கும் "Creative Crafts "எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வில்  A.செய்யது இப்ராஹிம் அவர்கள்,வண்ண காகிதத்தில்  விதவிதமான  வடிவங்களில் பறவைகள் ,பூக்கள் மற்றும் அட்டை கொண்டு புகைப்பட சட்டகம்  செய்வது குறித்து  எளிய செயல்விளக்கங்களுடன் இந்நிகழ்வில்  குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் .இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...

நன்றி...

இந்நிகழ்வின் புகைபடத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/19rMmJR58G/