வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவின் சாம்ராஜ்யம்" என்ற தலைப்பில் திருமதி மோ.கவிதா(முதல்வர், சேர்மத்தாய் வாசன் கல்லூரி, மதுரை) அவர்கள்- 07.10.2025 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு
கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் சேர்மத்தாய் வாசன் கல்லூரி இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று " 07.10.2025" செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு ஐந்தாம் தளத்தில் உள்ள பல்லூடகப் பிரிவில் "வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவின் சாம்ராஜ்யம்" என்ற தலைப்பில் திருமதி மோ.கவிதா (முதல்வர்(பொ), சேர்மத்தாய் வாசன் கல்லூரி, மதுரை) அவர்கள் மாணவிகளின் வலைப்பூ (blog) பதிவுகளை திரைக்காட்சிப்படுத்தி சிறப்புரை நிகழ்த்தினார்.இந்நிகழ்வில் செயற்கை நுண்ணறிவு வலைத்தளங்களில் எப்படி ஒருங்கிணைக்கப்படுகிறது, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கிறது என்பதையும், அனைவருக்கும் பயன்படும் வகையில் எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.
