” Discovering your super-power” ஞாயிறு (24.08.2025) காலை 11.00 மணிக்கு

Posted by Mohanraj Sekar on August 20, 2025

வணக்கம் !மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு திருமிகு.N.கோமதி, (மனிதவளம் மற்றும் டிஜிட்டல் கல்வித் தலைவர்),மகாத்மா பள்ளி,மதுரை.அவர்கள் வழங்கும் "Discovering your super-power” எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருமிகு N.கோமதி அவர்கள் , கருணை, கவனம், படைப்பாற்றல், தைரியம், சூப்பர் பவர் சவால்கள், சூப்பர் பவர் வாய்ப்புகள் - உங்கள் சக்திகளை வலிமையாக்கும் பழக்கவழக்கங்கள் என்ன?, உங்கள் சூப்பர் பவர்களை அடைவதற்கான கருவிகள் மற்றும் நுட்பங்கள், திரைப்படம் Vs பயிற்சி வேறுபாடு குறித்து மிக எளிமையாக குழந்தைகள் அறியும் வண்ணம் செயல்பாடு அடிப்படையிலும் விளக்கக்காட்சி வாயிலாகவும் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ... நன்றி ....   






Categories: