”கடல் பூதம்” குழந்தைகளுக்கான நாடக நிகழ்ச்சி 03.08.2025 ஞாயிறு காலை 11.00 மணி
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (03.08.2025 ) ஞாயிறு காலை 11.00 மணிக்கு நாடக கலைஞர் முனைவர்.வேலு சரவணன் அவர்கள் வழங்கும் ”கடல் பூதம்” எனும் குழந்தைகளுக்கான நாடக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் முனைவர் வேலு சரவணன் அவர்கள் ஏழைச்சிறுவன் கோரி எனும் கதாபாத்திரம் வாயிலாக ஒரு தொழிலை பிறப்பின் அடிப்படையில் கொண்டு வந்த கொடுமையை மட்டுமல்ல, மனிதர்கள் தங்களது வேலைகளை தாங்களே செய்வது நல்லது எனும் அறத்தை உணர்த்தும் விதமாக, இந்நாடக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ... நன்றி ...





