குழந்தைகள் நிகழ்ச்சி - "குழந்தைகளுக்கான கோடைகால உணவியல் மற்றும் வாழ்வியல் நெறிகள்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (06.04.2025) அன்று காலை 11.00 மணிக்கு பேரா. பெரு. வீர. கோபிமணிவண்ணன், பேராசிரியர் & தலைவர், உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை அவர்களின் "குழந்தைகளுக்கான கோடைகால உணவியல் மற்றும் வாழ்வியல் நெறிகள்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்,பேரா. பெரு. வீர. கோபிமணிவண்ணன் அவர்கள் வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார் .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...




