"முத்தமிழ் முற்றம்" 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு -“பெண்மையைப் போற்றும் வள்ளுவம்” என்ற தலைப்பில் தமிழாசிரியர் திரு .வி. கார்த்திக் அவர்கள் சிறப்புரை நிகழ்ச்சி
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று "21.03.2025" வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் “பெண்மையை போற்றும் வள்ளுவம்” என்ற தலைப்பில் தமிழாசிரியர் திரு வி. கார்த்திக் M.A., M.Phil., B. Ed அவர்கள் திருக்குறள் காட்டும் பெண்மை உயர்ந்தது, உன்னதமானது, தன்னையும் உயர்த்திக் கொண்டு, தன்னைச் சார்ந்தவர்களையும், உலகையும் உயர்த்தக் கூடியதாக விளங்குகின்றது என்பது போன்ற கருத்துக்களை எளிய நடையிலும் பெண்மையை போற்றும் சில குறள்களை மேற்கோள்காட்டியும் சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

