சிறுவர்களுக்கான "குரலோடு விளையாடு" - என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
வணக்கம் !
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வாக காலை 11.00 மணிக்கு திரு.இராஜகலைஞன் விஜயராம், ஆசிரியர். அவர்களின் "குரலோடு விளையாடு" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது,இந்நிகழ்வில், ஆசிரியர் விஜயராம்அவர்கள்,முதலில் குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் இசைக்கு ஏற்ப நடன அசைவுகளை கற்றுக்கொடுத்து ,குரல் இனிமையோடு எவ்வாறு பேசுவது மற்றும் பலகுரலில் ஏற்ற இறக்கங்களோடு பேசுவது குறித்து எளிய செயல் விளக்கங்களோடு குழந்தைகளுக்கு பயிற்சி வழங்கினார் இறுதியில் "மோட்டு பட்லு" என்ற காணொளியில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவகையில் குரல் அமைத்தார் .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...