குழந்தைகள் நிகழ்ச்சி -"சிறுவர்களுக்கான "காகித மடிப்பு(ஓரிகாமி)கொண்டாட்டம்" - திரு. தியாகசேகர், ஒரிகாமி கலைஞர் - 01.12.2024 - ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 11.00 மணிக்கு ஓரிகாமி கலைஞர் திரு. தியாகசேகர் அவர்களின் "காகித மடிப்பு(ஓரிகாமி) கொண்டாட்டம்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திரு. தியாகசேகர் அவர்கள் காகித மடிப்பு பற்றிய அறிமுகம் செய்து காகித மடிப்பு மூலமாக, தொப்பி, பெட்டி, அன்னம், போன்றவற்றை உருவாகும் நுட்பங்களை எளிய செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் , இந்த நிகழ்வானது குழந்தைகளின் நினைவாற்றல், செறிவு, மன திறன் மற்றும் கண்-கை ஒருங்கிணைப்பு ஆகியவற்றை சிறந்தமுறையில் செயல்படுத்த உதவும் வகையில் அமைந்தது. இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...




