" நிலவொளியில் ” (இலக்கியம் சார்ந்த கலந்துரையாடல்) | 21.06.2024, 6.30 PM
மாதாந்திர தொடர் நிகழ்ச்சியாக பௌர்ணமி தினமான இன்று நிலவொளியில் என்ற தலைப்பில் இலக்கியம் மற்றும் அதை சார்ந்த கலந்துரையாடல்கள் நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது தனி திறமையான இலக்கியம் சார்ந்த படைப்புகளை பகிர்ந்தும் தாங்கள் கற்று உணர்ந்த புத்தகத்தை பற்றிய கருத்துக்களை பதிவு செய்தும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

