" கோடை கொண்டாட்டம் 2024 ” ( வேடமிட்டு கதை சொல்லுதல்) - திரு.தாமிரபரணி மதியழகன் | 02.05.2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று நடைபெற்ற ”கோடை கொண்டாட்டம் 2024” நிகழ்வின் இரண்டாவது நிகழ்ச்சியாக திரு.தாமிரபரணி மதியழகன் அவர்களின் "வேடமிட்டு கதை சொல்லுதல் " நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திரு.தாமிரபரணி மதியழகன் மற்றும் அவரது குழுவினர்கள் குழந்தைகளுக்கு சிறந்த முறையில் வேடம்மிட்டு கதைசொல்லுதல் மூலம் , மரங்களை பாதுகாத்தல் குறித்து பாட்டுக்கள் பாடியும் ,குழந்தைகளை கதை சொல்ல வைத்தும் ,நிகழ்ச்சியை சிறப்பாக வழங்கினார் ,குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் வந்திருந்து , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .