புத்தாண்டு கலைத்திருவிழா | 31-12-2023
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக 31.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அரசுப் பள்ளி குழந்தைகள் பங்குபெற்ற " புத்தாண்டு கலைத்திருவிழா " நடைபெற்றது. இந்நிகழ்வை, பொது நூலக இணை இயக்குநர் (ம) கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் முனைவர்.செ.அமுதவல்லி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்கள். மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கே.கார்த்திகா அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். மதுரை மாவட்ட நூலக அலுவலர் திருமதி.பாலசரஸ்வதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில், பள்ளி மாணவர்கள், நூலக வாசகர்கள் மற்றும் பொது மக்கள் என சுமார் 400 பேர் கலந்துகொண்டு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தார்கள். நிகழ்வின் முடிவில், கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.